தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்: பொத ுமக்கள் அவதி:

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் மக்கள் அவதி:

மதுரை:

மதுரை நகரில், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், நகரில் பல தெருக்களில் குப்பை போல காட்சியளிக்கிறது .

இதனால் ,பல பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் ,நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யும்படி, சமூக ஆர்வலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மதுரை நகரில் பல இடங்களில் குப்பைகள் மழை போல காட்சி அளிக்கிறது.

இதனால், தொற்று நோய்கள் ஏற்படலாம் என இப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.

ஆகவே, மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினர் இப்பிரச்சனையை சமாளிக்க மாற்று ஏற்பாடுகளை துரிதமாக செய்ய வேண்டுமெனவும், இதுகுறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: