பிரதோஷ வழிபாடு:

காரியாபட்டி வட்டாரத்தில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு:

காரியாபட்டி, மே: 28.

காரியாபட்டி பகுதியில், சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. காரியாபட்டி, கிழவனேரி ஆதி ஈஸ்வரன் – ஈஸ்வரி கோவில், கம்பிக்குடி, சூரனூர் சிவன் கோவில், நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில், வளாகம் செவல்பட்டி சிவன் கோவில் ஆகிய இடங்களில் பிரதோஷம் வழிபாடு மற்றும்.சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
இதேபோல, மதுரை அருகே பல கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திருவேடகம் ஏடகநாதர் சுவாமி, தென்கரை மூலநாத சுவாமி, திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், மதுரை மேலமடை சவுபாக்கிய விநாயகர் கோவில் ,சோழவந்தான் விசாக நட்சத்திர கோயிலான ,பிரளயநாத ர் சிவன் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, இக்கோவில் அமைந்துள்ள நந்தி பகவான் மற்றும் சிவபெருமானுக்கு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்
தொடர்ந்து, சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சோழவந்தான்,
சிவன்கோவிலில் நடைபெற்ற பிரதோச விழாவிற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர் இளமதி, தொழிலதிபர் எம். மணி என்ற முத்தையா பள்ளித்
தாளாளர் மருதுபாண்டியன் , கோயில் கணக்கர்
பூபதி உட்பட பலர் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: