கவுன்சிலருக்கு, வணிகர்கள் பாராட்டு:

சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலர் எம் மருது பாண்டியன் கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை பொதுமக்கள் வணிகர்கள் பாராட்டு

சோழவந்தான் மே 28

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன விரைவில் நடைபெற உள்ள வைகாசித் திருவிழாவை முன்னிட்டு பெரிய கடைவீதியில் உள்ள இலவச கழிப்பறையை சரி செய்ய வேண்டும். அவ்விடத்தில் குப்பை கொட்ட கூடாது என்று பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலர் மருதுபாண்டியன் செயல் அலுவலர் சுதர்சனிடம் பேரூராட்சி மன்ற கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று உடனடியாக அதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த கழிவறையை வணிகர்கள், பக்தர்கள் உபயோகம் செய்து வந்தனர். அதனை கருத்தில் கொண்டு பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை வைத்து செயல்படுத்திக் காட்டிய பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலர் எம் மருதுபாண்டியனை பொதுமக்கள் வணிகர்கள் வெகுவாக பாராட்டினர். இதேபோல ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கேட்டு கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: