சோழவந்தான் அருகே பலத்த மழை, தென்னை வாழை ம ரங்கள் சேதம்:

சோழவந்தான் அருகே, குருவித்துறை பகுதியில், இடி மின்னலுடன் பெய்த கனமழை: 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் 5000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம்:

அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை:

சோழவந்தான், மே :27.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, குருவித்துறை பகுதியில் நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் பெய்த கனமழையின் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள சீனிவாசன் என்பவரின் தென்னை மரங்கள் சுமார் 50 வாழை மரங்கள் சுமார் 500 தவமணி என்பவரின் தென்னை மரங்கள் 20 வாழை மரங்கள் சுமார் 200 போஸ் பாண்டி என்பவரின் சுமார் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் அயன் குருவித்துறை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் தென்னை வாழை தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் பத்துக்கும் மேற்பட்ட மாமரங்கள் ஒடிந்து சேதமாகின. சுமார் 10க்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் ஒடிந்து இரவு முழுவதும் மின்சாரம் தடைபெற்றிருந்தால் விவசாயி ஒருவருக்கு சொந்தமான மோட்டார் பம்பு செட்டுகள் மற்றும் மேற்கூரைகள் முற்றிலும் சேதம் ஆகியிருந்தது. வேளாண்மைத்துறை அதிகாரிகள், மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று, இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் தமிழக அரசைகேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், இதே போல் சென்ற ஆண்டும் இந்த பகுதியில் கனமழைக்கு தென்னை வாழை மரங்கள் பாதிக்கப்பட்டிரூந்ததாகவும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்று ஒரு வருடமாகியும் நிவாரணம் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகையால், இந்த ஆண்டாவது முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல், மன்னாடிமங்கலம், கருப்பட்டி , இரும்பாடி, ஆகிய பகுதிகளிலும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்து இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: