மதுரையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:
மதுரை:
2003 முதல் செயல்பட்டு வரும் புதிய பங்களிப்பு ஓய்வுதிய. திட்டம் (CPS) ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை (DA) உடனடியாக அறிவிக்க வேண்டும் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (E. L பணப் பயன்) பெறும் உரிமையை மீண்டும் வழங்கப்பட வேண்டும் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,
மதுரையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அதன் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த
ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் சுருளிராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்களில் சுமார் 300க்கு மேற்பட்ட மற்றும் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில், தமிழக அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.