மதுரை அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்:

மதுரை அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்:

மதுரை:

மதுரை அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மதுரை அருகே கருப்பாயூரணி
யிலிருந்து, வரிச்சூர் பிரிவு வரை இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இப்போட்டிகளை, போட்டியிட தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி தொடங்கி வைத்தார். இப்போட்டியில், இரட்டை மாட்டு வண்டிகள் அதிக அளவில் பங்கேற்றனர். இப்போட்டியை முன்னிட்டு,
மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு அருகேயும், கருப்பாயூரணி பகுதிகளிலும் போலீசார் சாலைகளில், வரிசியூர் பூவந்தி ஆகிய ஊர்களுக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
இதனால், பலருக்கும் முகம் சுளிக்க வைத்தது. ஒருவருடைய பிறந்தநாளுக்காக, பொதுமக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ன நியாயம் என பலர் போலீஸாரும் வாதிட்டனர்.
மேலும், மாட்டுவண்டி பந்தயம் நடத்தியது, மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையாகும்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை, மதுரை போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: