கலைஞர் நூலகம்: அமைச்சர்:

மதுரையில் கலைஞர் நூலக கட்டுமான பணியானது விரைந்து நடைபெறுகிறது அமைச்சர் ஏ.வ. வேலு தகவல்:

மதுரை:

மதுரையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் நூலகம் கட்டும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. இப்பணியினை ,தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, அமைச்சர் பி. மூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி ஆகியோர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது , தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.
வேலு செய்தியாளரிடம் கூறியதாவது:

மதுரையில், கலைஞர் பெயரில் நூலகம் கட்டும் பணி விரைந்து நடைபெறுகிறது .
ஜூன் மாதத்துக்குள் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும். இந்த நூலகமானது, ஏழு தளங்களைக் கொண்டது .
கட்டுமான பணி முடிவடைந்ததும், நூலகத்தின் உள்ளே அலமாரிகள் மட்டும் டிசைன்கள் செய்யப்படும் .
இந்த நூலகமானது மிகப்
பெரிய அளவில் அமைய உள்ளது. நூலகத்தின் மூலம் தென்மாவட்ட மாணவர்கள், பணி தேடுவோர் ஆகியோர் பயன்பெறும் வகையில் அமையும்.
இந்த கட்டுமான பணிகளை, தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களும், வல்லுனர்களும் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர் என்றார் .
இந்த ஆய்வின் போது, மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், ஆணையாளர் மருத்துவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: