சமத்துவபுர கட்டிட பணிகள், அமைச்சர் ஆய்வு :

சமத்துவபுர, கட்டமைப்பு பணிகளில் அமைச்சர் ஆய்வு:

சிவகங்கை:

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்
குட்பட்ட கோட்டை வேங்கைப்பட்டியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோட்டை வேங்கைப்பட்டியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவிக்கையில்,
டாக்டர்.கருணாநிதி , பொருளாதாரத்தில் பின்
தங்கியவர்களுக்கும், வீடு இல்லாத
வர்களுக்கும் கான்கிரீட் வீடு வழங்க வேண்டும் என்பதற்காகவும், தந்தை பெரியார் சமத்துவபுரம் திட்டத்தினை தமிழகத்தில் ஏற்படுத்தி, மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தினார்கள். அவ்வழியில், செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், தந்தை பெரியார் சமத்துவபுர திட்டத்திற்கு, தற்போது புத்துயிர் ஊட்டியுள்ளார்கள். இதன்மூலம் அனைத்துத்
தரப்பினரும் ஏற்றத்தாழ்வின்றி சமமானமுறையில் வசித்திடும் பொருட்டு முன்மாதிரியான கிராமத்தினை உருவாக்கிட வழிவகை ஏற்படுத்தியுள்ளார்கள்.
ஒரு மாநிலம், ஒரு நாடு, அமைதியாகவும் சாதிமத பேதமின்றி, அமைதிப் பூங்காவாக உருவெடுக்கும் நோக்கில், அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான இடமாக தந்தை பெரியார் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதில் ,தமிழகத்தில் 180 சமத்துவபுரம் புனரமைக்க
ப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படாத வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள,
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் முதற்கட்டமாக, விழுப்புரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தந்தை பெரியார் சமத்துவபுரம் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்
கொள்ளப்பட்டுள்ளது.
அதில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோட்டை வேங்கைப்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் ஏற்படுத்தப்பட்டு 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதற்கான பயனாளிகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளன.
பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டுத்
திடல், பொது விநியோகக்கடை, மரக்கன்றுகள் வளர்த்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள், விரைந்து முடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்
ஆ.சிவராமன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவரஞ்சனி, சிங்கம்புணரி பேரூராட்சித்
தலைவர் அம்பலமுத்து மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: