சிறந்த எழுத்தாளருக்கு, ஆட்சியர் மரியாதை:

தமிழ்நாடு முதலமைச்சரிடம், சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பொன்னாடை அணிவித்து வாழ்த்து:

சிவகங்கை:

தமிழ்நாடு முதலமைச்சரிடம்,
சிறந்த எழுத்தாளர்களுக்கான நிதியுதவி பெற்ற எழுத்தாளர் மற்றும் விடுதிக்காப்பாளர் த.செந்தில்குமார் , மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவிக்கையில்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கான படைப்புக்களை உருவாக்கிடும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும் அவர்களது படைப்புக்களை நூலாக வெளியிடும் வகையில், ரூ.50,000
நிதியுதவி தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், தமிழக அரசால் 2021-2022-ஆம் ஆண்டிற்கு சிறப்பு படைப்புக்களை தெரிவு செய்திட அமைக்கப்பட்ட குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 படைப்புக்களை நூலாக வெளியிடுவதற்கு ஒவ்வொரு படைப்பிற்கும் செலவினத் தொகையாக ரூ.50,000
அல்லது செலவினத் தொகை இவற்றில் எது குறைவான தொகையோ அதை நிதியுதவியாக வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முதமைச்சர் , 13.05.2022 அன்று தலைமைச் செயலகத்தில் சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மானாமதுரை ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதிக் காப்பாளர் த.செந்தில்குமார், ரூ.25,000
நிதியுதவி வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார்கள். அவருக்கு ,மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன் உட்பட விடுதிக்காப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: