கூட்டுறவு அனைத்து வங்கி பணியாளர் சங்கத் தின் சார்பாக ஆர்ப்பாட்டம்:

மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக 7 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம்:

மதுரை:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசர்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பதிவாளர் சுற்றறிக்கை படி துணைப் பதிவாளராக அனுமதிக்கப்
பட்டுள்ள ஊதியத்தை தணிக்கையாளர் மலைச்சாமி தணிக்கையில், ஏற்கனவே இரண்டு வருடங்கள் முந்தைய ஆண்டுகளில் அனுமதித்ததை இந்த வருடமும் அனுமதிக்க லஞ்சம் கேட்டு மிரட்டி உள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கூட்டுறவு உதவி தணிக்கை இயக்குனர் மற்றும் மண்டல கூடுதல் கூட்டுறவு தணிக்கை இயக்குனரிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் ,
தவறுக்கு உடந்தையாக தணிக்கையாளர் மலைச்சாமி செயல்பட்டு வருவதாகவும்,
எனவே, கூட்டுறவு தணிக்கையாளர் கூட்டுறவு உதவி தணிக்கை இயக்குனர் கூட்டுறவு கூடுதல் தணிக்கை இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் தொடக்க கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் பணியாளர்கள் விருதுநகர் ,மதுரை, உட்பட 7 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…
சம்பந்தப்பட்ட பணியாளர்கள் சம்பளம் தரும்வரை சம்பந்தப்பட்ட கூட்டுறவு தணிக்கையாளர் உதவி தணிக்கை இயக்குனர் மற்றும் கூடுதல் தணிக்கை இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கும் வரையிலும் தணிக்கை பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: