திருப்பரங்குன்றத்தில், காவல் துறையினர் விழிப்புணர்வு:
மதுரை:
திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து, வாகன ஓட்டிகளிடம் நோட்டீஸ் வழங்கி வாசிக்கச் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள், இளைஞர்கள் என, அனைவரையும் ஓரமாக நிற்க வைத்து, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து, ஆய்வாளர் பூர்ணிமாவின் தலைமையில் போலீஸார்
வாசிக்கச் செய்து, உறுதிமொழி எடுத்து அனுப்புகின்றனர்.