பொது மக்கள் கருத்து கேட்புக் கூட்டம்:

சார்பதிவாளர் அலுவலக கிராம எல்லைகளை, சீரமைப்பது தொடர்பாக, பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம்: ஆட்சியர்:

சிவகங்கை:

வருவாய் வட்ட தலைமையிடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைமையிடம் அடிப்படையில், சார்பதிவாளர் அலுவலக நிர்வாக எல்லைக்குட்பட்ட கிராமங்களை மறுசீரமைத்தல் தொடர்பாக, பதிவுத்துறை தலைவருக்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மற்றும் காரைக்குடி பதிவு மாவட்டங்களைப் பொறுத்து அனைத்து சார்பதிவாளர்
களிடமிருந்தும், பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் வருவாய் வட்ட தலைமையிடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைமையிடம் அடிப்படையில் அவற்றோடு இணைக்கப்பட வேண்டிய வழிகாட்டி கிராமங்களின் விபரங்களைப் பொறுத்து, சார்பதிவாளர் அலுவலக கிராம எல்லைகளை சீரமைப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர், தலைமையில் 25.05.2022 அன்று முற்பகல் 10.30 மணியளவில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமானது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும், சீரமைப்பிற்கு உட்புகுத்தப்படும் வழிகாட்டி கிராமங்களின் விபரங்கள் துணைப்பதிவுத்துறைத்தலைவர் அலுவலகம், சிவகங்கை மற்றும் காரைக்குடி மாவட்டப்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களின் விளம்பரப்பலகைகளில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இக்கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: