பூக்குழி விழா:

சோழவந்தானில் ,15 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற அருள்மிகு துரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழா:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் துரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தானில் ,15 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இக்கோவில் திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
12 நாள் திருவிழாவில் தொடர்ந்து , திருக்கல்யாணம்,
கோட்டை கட்டுதல், கருப்பட்டி கிராமத்தில் கீசகன் வதம் மற்றும் பீமன் வேடம், அர்ச்சுனன் தபசு, அரவான் படுகளம், துரியோதனன் படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வாக , மந்தைக் களத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பூக்குழி திருவிழா முடிந்த பின்பு திரௌபதையம்மன் சோழவந்தானில், நான்கு ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: