விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:

வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்:

மதுரை:

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர்
பார்த்திபன் தலைமை வகித்தார்.
துணை வட்டாட்சியர் மாதவன் தேர்தல் வட்டாட்சியர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் கூட்டத்தில், வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது :
நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் மணல் மேவி உள்ளதால் கண்மாய்க்கு மழை நீர் வருவது தடைப்படுகிறது.
மேலும், தென்பழஞ்சி விவசாய நிலத்திற்குள் செல்லும் மின்சார கம்பி தாழ்வாக செல்வதால், விவசாய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் வந்து செல்ல தடை ஏற்பட்டு உள்ளது.
எனவே, அதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அப்புறப்படுத்தவும் கோரிக்கை வைத்தனர்.
வட்டாட்சியர் பார்த்திபன் கூறுகையில், ”சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணப்படும்”என்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: