பாஜக பேனர்கள் அகற்றம், கட்சியினர் சாலை ம றியல்:

மதுரையில் பாஜக பேனர்கள் அகற்றம் சாலை மறியல்:

மதுரை:

மதுரை நகரில் ,பாஜக வைத்துள்ள பேனர்களை, மதுரை மாநகராட்சி நிர்வாகம் அகற்றுவதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாஜக நிர்வாகிகள் கூட்டமானது, மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறுகிறது.
இதை ஒட்டி, பாஜகவினர் மதுரை நகரில் பேனர்களை வைத்துள்ளனர்.
இதை மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினர், அகற்றி உள்ளனராம்.
இதைக் கண்டித்து, மதுரை அழகர்கோவில் சாலையில் ,பாஜகவினர் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர்.
இதனால், மதுரை அழகர்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார், அப்பகுதியில் குவிக்கப்பட்டு, பாஜக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: