சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம்…..
சிவகாசி :
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை ஸ்ரீபத்திரகாளியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ரதவீதிகளில் வலம் வந்தார். அதனை தொடர்ந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீபத்திரகாளியம்மன் வீதியுலா வந்தபோது கண் கவரும் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. ஐந்தாம் திருவிழா மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீபத்திரகாளியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.