அரிசி ஆலைக்கு அனுப்ப முடியாத நெல்லை, உடன ே எடுத்து செல்ல உத்தரவு:

அரிசி ஆலைக்கு அனுப்ப முடியாத நெல்லை உடனே எடுத்து செல்ல வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு:

மதுரை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, கட்டக்குளம் ஊராட்சியில் கடந்த மார்ச் 9ஆம் தேதி முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள
வருவாய் கிராமங்களான, கட்டக் குளம். தும்புசாம் பட்டி, ரிஷபம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் விளைவிக்கக்கூடிய நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கட்டக்குளம் ஊராட்சி நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் வியாபாரிகள் விவசாயிகள் என்ற போர்வையில் பொது விநியோகத்திற்கு திட்டத்திற்கு எடுத்து அரிசி ஆலைக்கு அனுப்ப முடியாத நெல் மற்றும் நீண்ட காலமாக பதுக்கி வைக்கப்பட்ட நெல்லை அரசு நோடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முயற்சித்த தங்கராஜ் என்பவர் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் வந்ததைத் தொடர்ந்து நேரடி ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரமிளா, துணை மண்டல மேலாளர் கார்த்திகேயன், தரக்கட்டுப்பாட்டு மேலாளர் அன்பு ராஜா, வாடிப்பட்டி தாசில்தார், நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள், கட்டக்குளம் ஊராட்சியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேரடியாக சென்று தரமற்ற நெல்லை விற்பனை செய்ய முயன்றவர்களின் நிலத்தை கள ஆய்வு செய்தனர் .
அப்போது, கடந்த நான்கைந்து மாதங்களுக்கு வரை விவசாயம் செய்யாமல் கிடப்பதே ஆய்வில் கண்டு பிடித்தனர்.
உடனடியாக, தரமற்ற நெல்லை விற்பனை செய்ய முயன்ற 6 பேரையும் உடனடியாக நெல்லை அள்ளி செல்லுமாறு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: