சிவகாசி அருள்மிகு பத்திர காளியம்மன் கோவ ில் விழா:

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன், கைலாச பர்வத வாகனத்தில் எழுந்தருளினார்…..

சிவகாசி :

விருதுநகர் மாவட்டம், சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா உற்சாகமாக நடைபெற்று வருகிறது. நேற்று வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீபத்திரகாளியம்மன், இரவு கைலாச பர்வத வாகனத்தில், சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் வலம் வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழாவை முன்னிட்டு இந்து நாடார்கள் உறவின்முறைக்கு சொந்தமான பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: