பலத்த சூறைக்காற்று,மின் கம்பங்கள் முறிவு :

சோழவந்தான் அருகே ராயபுரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் மரங்கள் சாய்ந்தது மின்கம்பங்கள் ஒடிந்து சேதம்

சோழவந்தான் மே 5

சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று பலத்த காற்றுடன் வீசிய கோடை மழையின் காரணமாக மின்சார கம்பங்கள் ஒடிந்தது .நேற்று இரவு முதல் மின்சாரம் முற்றிலுமாக தடை உள்ளது வீடுகளின் மேல் கூரை இடிந்து பக்கவாட்டுச் சுவர்களில் இடிந்தும் பலத்த சேதம் உள்ளது. விவசாயி ஒருவரின் மாட்டு கொட்டம் முழுவதுமாக இடிந்து மிகுந்த கவலையில் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி ,கிராம நிர்வாக அலுவலர் முத்துராமன், ஊராட்சி செயலர் விக்னேஷ் சேத பகுதிகளை பார்வையிட்டு அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: