வாடிக்கையாளர்களுக்கு பகவத் கீதை புத்தகம ் பரிசு:

அட்சய திருதியை முன்னிட்டு நகைக் கடைகளில் குவியும் மக்கள்:

பகவத் கீதை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்த கடை உரிமையாளர்கள்:

சோழவந்தான், மே:
3.

அட்சய திருதியை முன்னிட்டு நகை கடைகளில் மக்கள் இன்று காலை முதல் குடும்பத்தினருடன் சென்று தங்களுக்கு பிடித்த டிசைன்களில் நகைகளை தேர்வு செய்து எடுத்து வருகின்றனர் .
அந்த வகையில், மதுரை காளவாசலில் உள்ள தங்கமயில் நகைக்கடையில் நகை களை தேர்வு செய்ய வந்த வாடிக்கை
யாளர்களுக்கு, பகவத் கீதை புத்தகம் வழங்கியது
வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
இதுகுறித்து வாடிக்கையாளர் கூறும்போது :
அட்சய திரிதியை அன்று, நகைகளை வாங்குவது மங்களகரமாக இருக்கும் என்பது காலம் தொட்டு இருக்கும் நம்பிக்கை இந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக அட்சய திரிதியை அன்று நகைகளை வாங்க முடியாமல் இருந்தோம் .
இந்த ஆண்டு அட்சய திருதியை அன்று நகை களை வாங்குவதற்காக வந்திருந்தோம் நகைகளை வாங்கிச் செல்லும்போது கடை உரிமையாளர்கள் பகவத் கீதை புத்தகம் வழங்கியது எங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தருவதாக தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: