சிவகங்கை அருகே, தடுப்பு பணிக்கு அடிக்கல் நாட்டு விழா:

கிருங்காக்கோட்டை ஊராட்சியில், பாலாற்றின் குறுக்கே ரூ.4.98 கோடி மதிப்பீட்டில்
தடுப்பணை: அமைப்பதற்கான பணியினை அடிக்கல்:

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கிருங்காக்கோட்டை ஊராட்சியில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைப்பதற்கான பணியினை அடிக்கல் நாட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் தொடங்கி வைத்து தெரிவித்தாவது:
தமிழ்நாடு முதலமைச்சர், நீர்வள ஆதாரங்களை சீரமைத்து, நிலத்தடி நீரை மேம்படுத்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில், மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாக, ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீரை உயர்த்துவதற்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையிலும், நீர்நிலைகளை சீரமைத்திடவும் அறிவுறுத்
தியுள்ளார்கள். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் சீரமைக்கப்பட்டு வருவதுடன், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட கிருங்காக்கோட்டை கிராமத்தின் அருகே உள்ள பாலாற்றின் குறுக்கே ரூ.4.98 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், நிலத்தடி நீர் மட்டமானது அதிக ஆழத்தில் உள்ளதால், இப்பகுதியில் உள்ள விவசாயப்பணிகள் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகள் மேம்படும். இத்திட்டத்தில் தடுப்பணை நீளம் 38.0 மீட்டர், உயரம் 154 மீட்டர், ஆண்டு கொள்ளளவு 0.68 மில்லியன் கன அடி (தோராயமாக) ஆகும்.
இந்த தடுப்பணை கட்டுவதன் வாயிலாக இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வாய்ப்புள்ளது. அதன்மூலம் கிராமங்களில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இத்தடுப்பணை மூலம் 1 கி.மீ. சுற்றளவில் உள்ள 59 கிணறுகள் நீர்செறிவூட்டுதலால், 206.22 ஹெக் (509.57 ஏக்கர்) விவசாய நிலங்கள் பயன்பெறவும் வாய்ப்புள்ளது.
இத்திட்டப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயப்பணி தேவைகளும், குடிநீர் தேவையும் மேம்படுவதோடு, இதன்மூலம் இப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்திற்க்கும் அடிப்படையாக அமைகிறது என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் (நீர்வளத்துறை, மணிமுத்தாறு, வடிநிலக்கோட்டம், தேவகோட்டை) டி.சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் (சருகனியாறு வடிநில உபகோட்டம், திருப்பத்தூர்) எம்.சங்கர், உதவிப்பொறியாளர்கள் விஜயமூர்த்தி, அய்யாவு ராஜா, சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: