மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வரவே ற்பு நிகழ்ச்சியில் சர்ச்சை:

மதுரை மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர் வரவேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதால் சர்ச்சை:

மதுரை:

மதுரை மருத்துவக் கல்லூரியில் , முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்கும் நிகழ்ச்சி மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.
மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மானவ மாணவியர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு வாசித்தனர்.
ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றதில், சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கிய உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதனைக் கேட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அப்போதே கல்லூரி முதல்வரிடம் இது குறித்து கேட்டு கோபம் அடைந்துள்ளார்.
இது தொடர்பாக, மருத்துவக்
கல்வி இயக்குனரகம், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலிடம் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்றது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே, மருத்துவக் கல்லூரி மாணவர் சங்க பொதுச் செயலாளர் தேசிய மருத்துவ ஆணையத்தில் இணையதளத்தில் இருந்து ஆங்கிலத்தில் இருந்த உறுதி மொழியை பதிவிறக்கம் செய்து, அதனை நிகழ்ச்சியில் மாணவர்களிடம் கொடுத்து உறுதிமொழி ஏற்க வைத்ததாகவும் , சம்பந்தப்பட்ட மாணவர் சங்க பொதுச்செயலாளர் வேண்டும் என்றே இதனை செய்யவில்லை எனவும், தவறுதலாக இதனை பதிவிறக்கம் செய்து கொடுத்ததாகவும் , மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் விளக்கம் அளித்துள்ளார். இதைத்
தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறுகையில்:
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்ட விவகாரம்.
மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்ய
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளராம்.
அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், இனி வரும் காலங்களில் ‘ஹிப்போகிரேடிக்’ உறுதிமொழியை தவறாது கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றது தொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தவும், மருத்துவ கல்வி இயக்குநருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: