கல் குவாரிகளில், வருவாய்த்துறையினர் திட ீர் ஆய்வு:

ராஜபாளையம் பகுதியில் செயல்படும் கல் குவாரிகளில், வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு…..

ராஜபாளையம் :

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில், வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். ராஜபாளையம் அருகேயுள்ள
அயன் கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம், சொக்கநாதன்புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில், 14 கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் செயல்பட்டு வரும் 5 கல் குவாரிகளில் சாத்தூர் கோட்டாட்சியர் புஷ்பா, ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அரசு அனுமதி வழங்கியுள்ள இடத்தை தவிர்த்து, மற்ற இடங்களில் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றதா, குடியிருப்பு பகுதியில் இருந்து 300 மீட்டர் இடைவெளி உள்ளதா,
கண்மாய் மற்றும் நீரோடைகள் பாதிக்கப்படாமல் இருக்கின்றதா, விவசாய நிலங்கள் மற்றும் புராதான சின்னங்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுகிறதா, கற்கள் வெட்டியெடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ள அளவிற்கு மட்டும் வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வு பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரித்து அறிந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: