திருவரங்கம் தேரோட்டம்:ஆண்டாள் மாலை:

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் மாலை, ஸ்ரீரங்கம் தேரோட்டத்திற்கு புறப்பட்டு சென்றது…..

திருவில்லிபுத்தூர் :

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் இருந்து, ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் தேரோட்டத்திற்கான மங்கலப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
ஸ்ரீரங்கத்தில், சித்திரை ரேவதி திருநாள் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. தேரில் எழுந்தருளும் ஸ்ரீரெங்கநாதர் சுவாமிக்கு சாற்றுவதற்காக, ஸ்ரீஆண்டாள் மாலை, வஸ்திரம், பட்டாடை, கிளி உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அனுப்பப்படுவது வழக்கம். இதற்காக ஸ்ரீஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மங்கலப் பொருட்கள் வழியனுப்பும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் கோவில் ஸ்தானிகம் பிரசன்னா, ஸ்ரீரங்கத்திற்கு மேளதாளம் முழக்கத்துடன் மங்கலப் பொருட்களை கொண்டு சென்றார். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ், கோவில் மணியம் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: