உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட 15 கி.மீ தூரம் சைக்கிள் பேரணி:
மதுரை:
உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளவும் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காகவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி இளந்திரையன், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மற்றும் நீதிபதி சரவணன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
சைக்கிள் பேரணியை, நீதிபதி இளந்திரையன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மொத்தமாக 15 கிலோமீட்டர் நடைபெற்ற சைக்கிள் பேரணியில், உயர்நீதிமன்ற மதுரைக்
கிளையில் தொடங்கி பாண்டிகோயில், வேளாண்மை கல்லூரி, ஒத்தக்கடை வழியாக மீண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வந்தடைந்தது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக, இந்த சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த சைக்கிள் பேரணியில் ,கலந்து கொண்ட வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.