இப்தார் விருந்தில், அமைச்சர்.

மகபூப் பாளையம் பகுதியில் நடைபெற்ற சமத்துவ இப்தார் நோன்பு நிகழ்ச்சியில், அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்:

மதுரை:

மதுரை மாவட்டம், சுன்னத்வல் ஜமாத் பள்ளிவாசல் மற்றும் 61-வது வார்டு திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து நடத்திய சமத்துவ இப்தார் நோன்பு நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார் .
அதனைத் தொடர்ந்து, பேசிய அமைச்சர்:
மதவாத சக்திகள் எத்தனை முயற்சி எடுத்தாலும், தமிழ்நாட்டில் நிலவும் நல்லிணக்கத்தை ஒரு சதவிகிதம் கூட அசைத்துப் பார்க்க முடியாது என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மதுரை மாநகர் மேயர் இந்திராணி பொன்வசந்தம், மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வி மற்றும் 61 வது வார்டு கவுன்சிலர் செல்வி செந்தில் 61-வார்டு வட்டச்செயலாளர் பி.கே செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக, பகுதி செயலாளர் மிசா பாண்டியன் நன்றியுரை கூறினார்.
பின்னர் சிறப்பு தொழுகை செய்து, இப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: