மதுரை அருகே, நெல் மூட்டைகள் தேக்கம் விவசா யிகள் கவலை:

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம்: பட்டதாரி விவசாயி வேதனை:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம்,
அலங்காநல்லூர் அருகே செல்லக் கவுண்டன் பட்டியில், அரசு கொள்முதல் நிலையத்தில், தேங்கிக் கிடக்கும்15.000-க்கும்
மேற்பட்ட நெல் மூட்டைகள்
பொறியியல் பட்டதாரி வேதனை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சுற்றுவட்டார பகுதியில், முல்லை பெரியாறு பாசனம் மூலம் விளைவித்து நெல் அறுவடை நடைபெற்ற பல்வேறு இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் அருகே செல்லக் கவுண்டன் பட்டியில், கடந்த இரண்டு மாத காலமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. சில விவசாயிகள் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்துள்ளனர்.
கடந்த 2 மாதத்திற்கு மேலாக கொள்முதல் நிலையத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் வராததால்,
தேங்கிய நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால் நெல் மூட்டைகள், குவித்து வைக்கப்பட்ட குவியல்கள் நனைந்து வருகிறது.
இதுகுறித்து முதல் தலைமுறை பொறியியல் பட்டதாரியான சிறுவாலை கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் கூறியதாவது:
பொறியியல் பட்டதாரியான, நான் விவசாயத்தில் உள்ள ஆர்வத்தால் மண்பரிசோதனை உட்பட அனைத்து சோதனைகளும் செய்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன்.
பல்வேறு இன்னல்களுக்கிடையே விவசாயம் செய்து கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வந்தோம்.
ஆனால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இங்கு விவசாயிகள் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்து காத்துள்ளனர்.
அதிகாரிகள் தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லாமல், அதிகப்படியான நெல் மூட்டைகள் நனைந்து வருகின்றனர்.
இது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயமாகும் என்னைப் போன்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு விவசாயத்தின் மீதான ஆர்வத்தை குறைத்து விடுகிறது
தமிழக அரசு உடனே தலையிட்டு, செல்லக் கவுண்டன் பட்டியில் குவித்து வைக்கப்பட்டுள்ள
நெல் குவியல் மற்றும் நெல் மூட்டைகளை, உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உடனடியாக பணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: