மதுரை மாநகராட்சி
“உலக மலேரியா தினம்” உறுதிமொழி
மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் ஏற்பு:
மதுரை:
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் “உலக மலேரியா தினம்” உறுதிமொழியினை, மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.கா.ப.கார்த்திகேயன், , துணை மேயர்
தி.நாகராஜன், ஆகியோர் முன்னிலையில் அனைத்து பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.
“உலக மலேரியா தின உறுதிமொழி”
நான் எனது வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ யாருக்கேனும் காய்ச்சல் எனத் தெரிந்தவுடன், அவர்களை மலேரியாவுக்கு இரத்த பரிசோதனை செய்யுமாறு வலியுறுத்துவேன். மலேரியா காய்ச்சல் என உறுதி செய்தவுடன், அவர்களை பூரண சிகிச்சை எடுத்துக் கொள்ள வலியுறுத்துவேன். மலேரியா நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், மாதந்தோறும் இரத்த தடவல் எடுத்து, மலேரியா இல்லை என உறுதி செய்யும் வகையில் ஒரு வருடம் வரை தொடர் கண்காணிப்பில் இருக்கச் செய்வேன். தண்ணீர் சேமித்து வைக்கும் மேல்நிலைத் தொட்டிகள், கீழ்நிலைத் தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள் மற்றும் கிணறுகளை கொசு புகாவண்ணம் மூடி வைப்பேன். அரசு மேற்கொள்ளும் மலேரியா நோய் கண்காணிப்பு மற்றும் கொசுஒழிப்பு நடவடிக்கைகளுக்கும், அவற்றை மேற்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். மலேரியா நோய் பரவலை இந்தியாவில் 2027ல் முற்றிலுமாக ஒழித்து 2030ல் மலேரியா நோய் இல்லாத நாடு என்ற இலக்கினை அடைய பாடுபடுவேன் என்று உளமாற உறுதிமொழி கூறுகிறேன் என மாண்புமிகு மேயர், வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் மரு.சங்கீதா, நகர்நல அலுவலர் மரு.ராஜா, உதவி ஆணையாளர் (வருவாய்) (பொ)
தட்சிணாமூர்த்தி, உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, மக்கள் தொடர்பு அலுவலர்
மகேஸ்வரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.