சோழவந்தான் பகுதியில், கிராமசபை கூட்டங்கள ்:

சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது:

சோழவந்தான், ஏப்ரல்: 25.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சியில், தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு கிராம சபை கூட்டம் வைகை ஆற்றங்கரையில் நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை வகித்து கூட்டத்தை நடத்தினார். பொதுமக்கள் குடிநீர் வழங்காத பகுதிகளில் வழங்க வேண்டும், நூறு நாள் வேலைத் திட்டம் முறைப்படுத்த வேண்டும், அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று தங்களின் தேவைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்தார்.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி செயலர், பற்றாளர் ,திமுக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் இதேபோல், முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தார். செயலாளர் மனோ பாரதி அறிக்கை வாசித்தார். வார்டு உறுப்பினர்கள் உட்பட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சுகாதார பணிகளை மேற்கொள்வது, 100 நாள் வேலை பணிகளை முறைப்படுத்துவது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்பு, உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதேபோல், ரிஷபம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சிறு மணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர் செல்லப்பா முன்னிலை வகித்தார்.
ஊராட்சி செயலாளர் அறிக்கை வாசித்தார். இதில், கிராம வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. வார்டு உறுப்பினர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: