முள்ளிப் பள்ளத்தில், கிராம சபை கூட்டம்:

வாடிபட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்:

சோழவந்தான் ,ஏப்ரல் :24.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் ஊராட்சியில், தமிழக அரசின் ஆலோசனையின் படி கிராமசபை கூட்டம் நடைபெற்றது .
ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். துணைத்
தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் மனோ பாரதி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், மனித உரிமைகள், மகளிர் மேம்பாடு, பருவநிலை மாற்றம், மக்கள் நல வாழ்வு, முறையான நீர் மேலாண்மை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில் ,வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: