மதுரை நகர, குற்றச் செய்திகள்:

மருத்துவமனைக்கு மருந்து ஆக்சிசன் சிலிண்டர்கள் சப்ளை செய்த ஏஜென்சி உரிமையாளருக்கு மிரட்டல்
டாக்டர், மெடிக்கல் நிர்வாகிகளிடம் விசாரணை.
மதுரை ஏப்ரல் 24 மருத்துவமனைக்கு மருந்து மற்றும்ஆக்சிசன் சிலிண்டர் சப்ளை செய்த ஏஜென்சி உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த டாக்டர்,மெடிக்கல் நிரவாகி , ஊழியர்கள் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை.
மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் ராம்பிரசாத்36.இவர் சர்வோலைப் சயின்ஸ் என்ற ஏஜென்சி நடத்தி வருகிறார். இதன் மூலம் எஸ் எஸ் காலனியில் உள்ள டாக்டர் பிரபு என்பவருக்கு சொந்தமான மருத்துவமனைக்கு ரூபாய் 55 லட்சத்து 26 ஆயிரத்து 400 ரூபாய்க்கு மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கியுள்ளார். அதற்கான தொகையை கேட்டபோது கொடுக்க மறுத்த டாக்டர் ராம் பிரசாத் மருத்துவமனை நிர்வாகி ஜெயலட்சுமி ஊழியர்கள் உள்பட சிலர் அவருக்கு மிரட்டல் விடுத்தது சிலர் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர் .இந்த சம்பவம் குறித்து ராம்பிரசாத் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் பிரபு ,மெடிக்கல் நிர்வாகி ஜெயலட்சுமி உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்து இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
************************************
கூடல் புதூரில்
வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த பைக்குகள் தீவைத்து எரிப்பு
மர்ம ஆசாமிகள் கைவரிசை.
மதுரை ஏப்ரல் 24 ஆலங்குளம் பாரதிபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் இளவரசன் 68. இவர் வீட்டின் முன்பாக நான்கு பைக்குகளை நிறுத்தி வைத்திருந்தனர் .நள்ளிரவில் இந்த பயலுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து எரித்து விட்டு ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து இளவரசன் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்குகளுக்கு தீ வைத்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
*******************************
ஐராவத நல்லூரில்
பணம் வைத்து சூதாட்டம்
பேர் 9 கைது பணம் பறிமுதல் மதுரை ஏப்ரல் 24 தெப்பகுளம் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன்.இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஐராவதநல்லூர் சின்ன கதியனூர் கம்மாய் அருகே சென்றபோது கும்பலொன்று பணம் வைத்து சூதாடிய கண்டார். அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார். அவர்கள் பணம் வைத்து சூதாடிய பணம் ரூபாய் 2530 ஐயும் 200 சீட்டுகளையும் பறிமுதல் செய்தார். பிடிபட்டவர்கள் ஐராவத நல்லூரை சேர்ந்த லோகநாதன் 45 பாலமுருகன் 53 முருகன் 52 மோதிலால் 63 உள்பட 9 பேரை கைது செய்தார்.
*********************************
ஆனையூரில்
மூதாட்டி விஷம்குடித்து தற்கொலை காரணம் என்ன போலீஸ் விசாரணை .
மதுரை ஏப்ரல் 24 ஆனையூர் மல்லிகை நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் பகீரதி 65. இவர் திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்தார். இந்த நிலையில் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். வீட்டில் இவர் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*********************************
தவணைத் தொகை செலுத்தாத வேன் டிரைவர் மீது தாக்குதல் பைனான்சியர் உள்பட 4 பேர் கைது மதுரை ஏப்ரல் 24 தவணைத் தொகை செலுத்தாத வேன் டிரைவரை தாக்கிய பைனான்சியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடல்புதூர் அப்துல்கலாம் தெருவைச் சேர்ந்தவர் அளவு சுந்தரம்36. இவர் பசிங்காபுரம் விஷால் நகர் ஜே ஜே கார்டன் ஐச் சேர்ந்த அருள் அமரன் மகன் நிர்மல் என்பவரிடம் டாட்டா ஏஜ் வேன் வாங்கியிருந்தார் .இதை இவரிடம் பைனான்ஸ் பெற்று வாங்கியுள்ளார். சரியான ஓட்டம் இல்லாததால் சில மாதங்கள் தவணைத் தொகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கூடல்புதூரில் அவரை வழிமறித்த பைனான்சியர் நிர்மல் அவரது உறவினர்கள் நிரஞ்சன் அருள் அமரன் பிரின்ஸ் ஆகியோர் வழிமறித்து பைனான்ஸ் தொகையை கேட்டு தரக்குறைவாக பேசி தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அழகுசுந்தரம் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
*******************************
மேல வாசலில்
முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் மற்றொரு வாலிபர் கைது மதுரை ஏப்ரல் 24 அண்ணா நகர் யாகப்பா நகர் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் சிவா என்ற அஞ்சான் சிவா20. இருவருக்கும் மேலவாசல சேர்ந்த பாண்டியராஜன் மகன் பாலாஜி 22 இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் மேலவாசல் பகுதியில் சென்ற சிவா என்ற அஞ்சான் சிவவை வழிமறித்து பாலாஜி கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிவா கொடுத்த புகாரில் திடீர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கத்தியால் தாக்கிய பாலாஜியை கைது செய்தனர்.
*********************************
நாகமலை புதுக்கோட்டையில்
வீடு புகுந்து கோழி திருட்டு
சிறுவன் உள்பட 2 பேர் கைது மதுரை ஏப்ரல் 24 மதுரை அருகே வடிவேல்கரை புதுக்குளம் கால்வாய் பகுதியை சேர்ந்தவர் சுசீலா68. இவர் வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று அவரது வீடு புகுந்த இரண்டு பேர் ரூபாய் 5ஆயிரம் மதிப்புள்ள கோழிகளை திருடிச் சென்று விட்டனர் .இந்த திருட்டு குறித்து சுசிலா நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார் .போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கீழக்குயில்குடி ஒத்தவீடுவை சேர்ந்த கண்ணன் மகன்பிரசாத்20, இவருடன் 17 வயது சிறுவன் இருவரும் சேர்ந்து திருடியது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
********************************
கீழக்குயில்குடி ஊா்யில்
டிராக்டர் பேட்டரிகள் திருட்டு போலீஸ் விசாரணை.
மதுரை ஏப்ரல் 24 கீழக்குயில்குடி தட்டனூரை சேர்ந்தவர் சுப்பையா மகன் மகேந்திரன்38. இவர் ஸ்ரீ மீனாட்சி மோட்டார்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் கடையை அடைத்துச் சென்று விட்டு மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது நிறுவனத்தின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு வைத்திருந்த ரூபாய் 21ஆயிரம் மதிப்புள்ள 7 டிராக்டர் பேட்டரிகளை திருடிச் சென்று விட்டனர்.இந்த திருட்டு குறித்து மகேந்திரன் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரி திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.
**********************************

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: