உலக புத்தக தினம்:

உலக புத்தக தினம்:

காரியாபட்டி:

திருச்சுழி கிளை நூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு
திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளரும் செல்வலட்சுமி தலைமை தாங்கினார். அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை
ரமாபிரபா முன்னிலை வகித்தார்.
இருவரும் புத்தக வாசிப்பு பற்றியும், நூலகத்தின் முக்கியத்துவம் குறித்தும், மாணவ,
மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்கள். ‘நூலகத்தின் பயன்பாடு’ பற்றி மாணவிகள் நந்தினி, காவ்யா மற்றும் மாணவர் விஷால் ஆகியோர், சிறப்பாகப் பேசினார்கள்.
இவர்கள் மூன்று பேருக்கும் நூலகர் பாஸ்கரன் பரிசுகள் வழங்கி வாழ்த்திப் பேசினார்.
திருச்சுழி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஃபாத்திமா உதவியுடன், இந்நிகழ்ச்சியை நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுந்தர்.அழகேசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில், நூலகப் பணியாளர்கள் பாண்டிதேவி, குமார், மஞ்சுளா மற்றும் ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, நூலகத்தில் மாணவ,மாணவிகள் பங்களிப்புடன் ‘புத்தகக் கண்காட்சியும் இடம்பெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: