சீம கருவேலை அகற்றும் பணியை, அமைச்சர் தொட ங்கி வைத்தார்:

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
திருப்பத்தூர் பெரிய கண்மாயில், சீமைக்கருவேல் மரங்களை
அகற்றும் பணியினை தொடங்கி வைத்தார்:

சிவகங்கை:

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில் உள்ள பெரிய கண்மாயில் நீர்வளத்துறையின் சார்பில், தனியார் வங்கியின் பெருநிறுவன சமூகப்பொறுப்பு நிதியின்
பங்களிப்புடன், மேற்கொள்ளப்படவுள்ள சீமைக்கருவேல் மரங்கள் அகற்றும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்து தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர், நீர்வள ஆதாரங்களை சீரமைத்து, நிலத்தடி நீரை மேம்படுத்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில், மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாக வரத்துவாய்கால், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறுப் பணிகளை மேற்கொண்டு, நீர்நிலைகளை சீரமைத்திட அறிவுறுத்
தியுள்ளார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சிகள் ஒன்றியங்கள், 11 பேரூராட்சிகள், 4 நகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளான கண்மாய், குளம், குட்டை, வரத்துவாய்க்கால், சாலை பகுதிகள், அரசுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில், தனியார் நிறுவனங்களின்
பெருநிறுவன சமூகப்பொறுப்பு நிதியின் பங்களிப்புடன் மேற்கொள்ளும் பொருட்டு சிவகங்கை மாவட்ட வங்கியின் மூலம் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்
பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக,
திருப்பத்தூர் பெரியகண்மாயில் சீமைக்கருவேல் மரங்கள் அகற்றும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சீமைக்கருவேல் மரங்கள் வறட்சி காலங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சி விடுவதால் தாவரங்களுக்கு போதிய நீர் கிடைக்கப் பெறாமல், விவசாயம் மற்றும் ஏனைய செடிகள் தழைக்கா வண்ணம் நிலமும் பயனற்ற நிலைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.
மேலும், கால்நடை தீவனங்களுக்கான புல்களை வளரவிடாமல் பாதிப்பினையும் ஏற்படுத்துகிறது.
இது குறித்து, பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்.
அனைத்து நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், குளம், ஏரி போன்றவற்றை ஆக்கிரமிப்பு இல்லாத நீர்நிலைகளாக இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் பெரிய கண்மாயை பொறுத்த வரையில், மருதுபாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட கண்மாய் ஆகும். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுக்காவில் உள்ள முடிமலை, கரந்தமலை, களவற்காடு வனப்பகுதியில் பாலாறு உற்பத்தியாகி, நத்தம் அருகில் உள்ள செந்துரை கிராமத்திலிருந்து ஆறாக வடிவு பெற்று திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டம் பகுதிகளில் தென்கிழக்காக பாய்ந்தோடி முடிவில் திருப்பத்தூர் பெரியகண்மாயினை வந்தடைகிறது. திருப்பத்தூர் பெரியகண்மாயின் கரையின் நீளம் 2520 மீட்டர் ஆகும். இதன் மூலம் பாசன வசதி அளிப்பதற்கென 4 மடைகள் உள்ளது. இக்கண்மாயின் பாசனப்பரப்பு 1023.93 ஏக்கர் (414.38 ஹேக்டர்) ஆகும். 75 மில்லியன் கனஅடி நீர்தேக்கும் திறன் கொண்ட இக்கண்மாயின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு 3.08 சதுரகி.மீ (1.93 சதுரமைல்) ஆகும். உபரிநீர் செல்வதற்கு மூன்று கலுங்குகள் மற்றும் 1 திறந்த வென்ட் ஆகிய கட்டமைப்புகளும் உள்ளன. இக்கண்மாயின் உபரிநீர் மனைய கண்மாய்க்கு செல்கிறது.
பாலாற்றில் இருந்து வரும் வரத்துக்கால்வாயின் நீளம் 1300 மீட்டர், அகலம் 7.50 மீட்டர் ஆகும். ஒசுவன் கண்மாயிலிருந்து வரும் உபரிநீர் கால்வாயின் நீளம் 2300 மீட்டர், அகலம் 5 மீட்டர் ஆகும். 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கண்டவராயன்பட்டி அணைக்கட்டிலிருந்து ஒசுவன் கண்மாய் மற்றும் பிளவக்கண்மாய் வழியாக அதிகப்படியான நீர் பெறப்பட்டு கண்மாய் முழுக்கொள்ளளவை எட்டியது. இக்கண்மாயிலிருந்து தற்சமயம் இரண்டு முறை சாம்பான் ஊரணிக்கும் மற்றும் சீதளி ஊரணிக்கும் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் பெரியகண்மாயில் உள்ள சீமைக்கருவை மரங்களை அகற்றி சீரமைத்திடுவதன் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்கப்பட்டு, விவசாயப் பணி தேவைகள், குடிநீர் தேவைகள் மேம்படுவதோடு, கால்நடைகளுக்கும், கூடுதல் நீர் ஆதாரம் கிடைப்பதற்கும் வழிவகை ஏற்பட்டு, இதன்மூலம் இப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்திற்க்கும் அடிப்படையாக அமைகிறது என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்
இக்கூட்டத்தில், ஊராட்சி ஒன்றியக்
குழுத் தலைவர் சண்முகவடிவேல், திருப்பத்தூர் பேரூராட்சித்
தலைவர் கோகிலாராணி, மானாமதுரை நகர்மன்றத்
தலைவர் மாரியப்பன் கென்னடி, ஆவின் தலைவர் (பால் உற்பத்தியாளர் ஒன்றியம்) சேங்கைமாறன், செயற்பொறியாளர் (நீர்வளத்துறை, மணிமுத்தாறு, வடிநிலக்கோட்டம், தேவகோட்டை) டி.சுப்பிரமணியன், பேரூராட்சி துணைத்தலைவர் கான்முகமது, உதவி செயற்பொறியாளர் (சருகனியாறு வடிநில உபகோட்டம், திருப்பத்தூர்) எம்.சங்கர், உதவிப்பொறியாளர் ஆன்ந்த மரியவளன், உதவிப்பொறியாளர் (பேரூராட்சிகள்) ரங்கராஜன், திருப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் இராதாகிருஷ்ணன், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் மண்டல மேலாளர்கள் மணிகண்டன், கிருஷ்ணன், மேலாளர்கள் இராமலிங்கம், கண்ணதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: