சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக.மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி:
சோழவந்தான், ஏப்ரல்: 21.
மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள முள்ளிப்பள்ளம் தென்கரை மன்னாடிமங்கலம் குருவித்துறை மேலக்கால் திருவேடகம் ரிஷபம் ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தற்போது, இரவு பகல் என 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை உள்ளது. இரவு நேரங்களில் அதிகப்படியான மின்வெட்டு ஏற்படுகின்றன. இதனால், சிறு குழந்தைகள் வைத்திருப்பவர் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். பகல் நேரங்களில் திடீர் திடீரென மின்சாரம் தடை ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, இப்பகுதி பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களின் போது சீரான மின் வெட்டு இருந்தது. தற்போது, புதிய அரசு பொறுப்பேற்றவுடன் குறைவாக இருந்த மின்வெட்டு தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், மின்சார துறை அமைச்சரும், தமிழக அரசும்
போதிய கவனம்
எடுத்து, சோழவந்தான் பகுதியில் நிலவி வரும் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.