மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே விவசாய நிலத்தை ஆக்கிரமித்து கனிமவளக் கொள்ளை
சோழவந்தான் ஏப்ரல் 20
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆளுங்கட்சி செல்வாக்கு இருப்பதாக கூறி மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர் புகார்
நிலத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவிதுறையில் சிவனம்மாள் என்பவருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அவரது வாரிசுதாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறைஊரணி அருகே உள்ள பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட சுமார் 20 அடிக்கு மேலாக மூன்று ஏக்கருக்கு மேல் ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு லாரிகளில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக குருவித்துறை சிவனம்மாள் வாரிசு தேவி என்பவர் கூறும்போது
தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மதுரை விக்கிரமங்கலம் கோட்டைச்சாமி என்பவர் அரசு அனுமதி பெற்றதாக கூறி ஜேசிபி இயந்திரம் மூலம் பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டி கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து கேட்டபோது ஆளுங்கட்சி செல்வாக்கு மற்றும்அரசியல் பின்புலம், அதிகாரம் தனக்கு இருப்பதாகக் கூறி எங்களை மிரட்டுகிறார்.
இது சம்பந்தமாக நாங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் , மதுரை கோட்டாட்சியர் வாடிப்பட்டி வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு மனு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை
ஆகையால். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு எங்கள் நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்
மேலும்.கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் விக்கிரமங்கலம் கோட்டைச்சாமி என்பவரின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.