சிவகங்கையில், புத்தகத் திருவிழாவில் போட ்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, எம். பி. பரிசு வழங்கினார்:

புத்தகத்திருவிழாவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர்
கார்த்தி ப சிதம்பரம்
பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்:

சிவகங்கை:

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் புத்தகத்திருவிழாவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன் முன்னிலையில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
சிவகங்கை புத்தகத்திருவிழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றும் வகையிலும், தனித்திறன்களை வெளிக்கொணர்வதற்காகவும், புத்தக வாசிப்புத்திறன்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் பல்வேறு போட்டிகள் கடந்த 15.04.2022 முதல் 25.04.2022 வரை காலை 10.00 மணி முதல் 04.00 வரை நடத்தப்படுகிறது. அதனடிப்படையில், மாறுவேடப்போட்டி, கட்டுரைப்போட்டி, கைகளால் பனைஓலைகளில் செய்யும் கைவினைப்பொருட்கள் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற 51 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.
தினந்தோறும் மாலை 05.00 முதல் 07.00 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு பங்கேற்றதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனைத்தொடர்ந்து, வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காகவும், புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும், பள்ளி மாணவ. மாணவியர்களை பண்படுத்துவதற்காகவும் காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை 1 மணி நேரம் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
புத்தகத்திருவிழாவின் போது நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. புத்தகத்திருவிழாவிற்கு வருகை புரிந்தவர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் தோழர்களிடம் எடுத்துக்கூறி அவர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்றையதினம் நடைபெற்ற புத்தகத்திருவிழாவில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் கலந்து கொண்டு, இப்புத்தகத்
திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள, கீழடி கண்காட்சி மற்றும் புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் மு.முத்துக்கழுவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், சிவகங்கை நகர்மன்றத் துணைத்தலைவர் ம.ப.கார்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் சேதுநாச்சியார் வீரக்காளை, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: