வட்ட அளவிலான மனுநீதி நாள் முகாம்:

காரைக்குடி, கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில்,
21.04.2022 அன்று வட்ட அளவிலான
மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்:

சிவகங்கை:

காரைக்குடியில், வட்ட அளவிலான மனு நீதி நாள் முகாம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,
தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில், 21.04.2022 அன்று காலை 10.00 மணியளவில், வட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெறவுள்ளது.
மேலும், இம்முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும்; இதர கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்படவுள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: