சிவகங்கை மாவட்டத்தில் சுகாதார திருவிழா:

சிவகங்கை மாவட்டத்தில், சுகாதார திருவிழா:

மதுரை:

தேசிய சுகாதாரத்திட்டம் மற்றும் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வட்டார அளவிலான சுகாதார திருவிழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர்
கார்த்தி ப .சிதம்பரம் அவர்கள் தொடங்கி வைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தேசிய சுகாதாரத்திட்டம் மற்றும் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வட்டார அளவிலான சுகாதார திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,
சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப
சிதம்பரம்
தொடங்கி வைத்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்துவப் பெட்டிகளை வழங்கினார்கள்.
நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,
பொதுமக்களுக்கு ஏற்படும் நீரழிவு மற்றும் இரத்த அழுத்தம் குறித்த பாதிப்புக்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்திடவும், முதியோர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களை தொடர் கண்காணிப்பு மூலமாகவும், மருத்துவ பரிந்துரையின் மூலமாகவும், சீரான சிகிச்சை மேற்கொள்
வதற்காகவும், சுகாதாரத்திருவிழா வட்டார அளவில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மற்றும் தேசிய சுகாதாரத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள 12 வட்டாரத்திலும், 1 வட்டத்திற்கு 1 முகாம் வீதம் சுகாதாரத்திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, இன்று கல்லல், ஒக்கூர், புளியடித்தம்பம் ஆகிய 3 இடங்களிலும், 19.04.2022 அன்று சாக்கோட்டை, தேவகோட்டை, கண்ணங்குடியிலும், 27.04.2022 அன்று திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய இடங்களிலும், 29.04.2022 அன்று திருப்பத்தூர், சிங்கம்புணரி, வி.புதூர் ஆகிய இடங்களிலும் நடைபெறவுள்ளது.
இம்முகாம்களில் மூலம் நோய் கண்டறிதல், மருந்து வழங்குதல், முதலமைச்சரின் எளிதாக மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குதல், தாய் சேய் நலம், தடுப்பூசி சேவைகள், தொற்றா நோய்க்கான சேவைகள், நீரழிவு, இரத்த அழுத்தம், வாய்ப்புற்று நோய் பரிசோதனை, காசநோய், கண் பரிசோதனை, பல், காது. மூக்கு, தொண்டை போன்ற பரிசோதனைகளும், யோகா மற்றும் தியானம், மருத்துவ ஆலோசனைகள் போன்றவை வழங்கப்படுகிறது.
தமிழக மக்கள் உயர்தரமான சிகிச்சை பெறும் பொருட்டு நடத்தப்படும் இவ்வாறான மருத்துவ சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ,மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இம்முகாமில் ,துணை இயக்குநர்(சுகாதாரபணிகள்) எஸ்.ராம்கணேஷ், துணை இயக்குநர் (குடும்ப நலம்) யோகவதி, கல்லல் ஒன்றியக்
குழுத் தலைவர் ஏ.சொர்ணம் அசோகன். வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜேம்ஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன், ஊராட்சி மன்றத்
தலைவர் நாச்சியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: