நினைவுகளில் அரசு செய்தி மக்கள் தொடர்பு த ுறை இயக்குனர் ஆய்வு:

நினைவகங்கள் இல் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஆய்வு:

மதுரை:

மதுரை மாவட்டம்,
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ்
பராமரிக்கப்பட்டு வரும் மணிமண்டபங்கள் மற்றும் நினைவில்லங்களின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து
செய்தித்துறை இயக்குநர் மற்றும் அலுவலால் அரசு துணைச்
செயலாளர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்,
நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
மதுரை மாவட்டத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் மணிமண்டபங்கள் மற்றும் நினைவில்லங்களின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து, செய்தித்துறை இயக்குநர் மற்றும் அலுவலால் அரசு துணைச் செயலாளர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறை (நினைவகங்கள்) பிரிவு மூலம், இந்திய தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட தலைவர்களின் தியாகங்களை போற்றிப் புகழ்கின்ற வகையில் இன்றைய தலைமுறையினர் அறிந்து பயன்பெற ஏதுவாக மணி மண்டபங்கள், நினைவு இல்லங்கள், நினைவுத் தூண்கள் போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. பெருந்தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் அரசு விழாவாக கொண்டாடப்படும் நேர்வுகளிலும், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது, இத்தகைய மணி மண்டபங்கள், நினைவு இல்லங்களில் உள்ள தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், நாடகக் கலையின் மூலம் பொதுமக்களுக்கு விடுதலைப் போராட்ட எழுச்சி ஏற்படுத்திய விடுதலைப் போராட்ட வீரரும் தலைசிறந்த நாடாக கலைஞருமான தியாகி விஸ்வநாததாஸ் அவர்கள் நினைவில்லம், அண்ணாநகர் சாத்தமங்கலம் பகுதியில், தனித்தமிழ் இயக்கத்திற்கு ஆழ்வேராய் இருந்து சிறப்பாக தொண்டாற்றிய தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமான மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் மணிமண்டபம், மேலூர் தும்பைப்பட்டி கிராமத்தில், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து மக்கள் நலனுக்காக சேவை செய்த தியாகசீலர் கக்கன் அவர்கள் மணிமண்டபம், திருப்பரங்குன்றம் விளாச்சேரி கிராமத்தில் தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரான தமிழறிஞர் பரிதிமார் கலைஞர் அவர்கள், நினைவில்லம் என 2 மணிமண்டபங்கள், 2 நினைவில்லங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் செய்தித்துறை இயக்குநர் மற்றும் அலுவலால் அரசு துணைச் செயலாளர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், பராமரிப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, செய்தித்துறை இயக்குநர் மற்றும் அலுவலால் அரசு துணைச் செயலாளர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், தெரிவிக்கையில்:-
நினைவில்லங்கள், மணிமண்டபங்கள் இருக்கும் இடத்தை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அறிவிப்புப் பலகைகள் அமைத்திட வேண்டும். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் மண்டபங்களில் உள்ள நூலகங்களை முழுமையாக பயன்படுத்திட ஊக்குவிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மணிமண்டபங்கள் மற்றும் நினைவில்லங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய புகைப்படங்களை தேவைக்கேற்ப புனரமைத்திடவும், புதிய அரிய புகைப்படங்களை காட்சிப்படுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல, மணிமண்டபம் மற்றும் நினைவில்ல கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உரிய திட்ட முன்மொழிவு தயார் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஒப்புதல் பெற்று மேல் நடவடிக்கைக்காக சென்னை தலைமை இடத்திற்கு அனுப்பி வைத்திட செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ம.கயிலைச்செல்வம் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: