சிங்கம்புணரியில், மின் இணைப்புக்கான சான ்றிதழ் வழங்கினார் ,அமைச்சர்:

சிங்கபுணரியில் , மின் இணைப்பு சான்றிதழ் வழங்கிய அமைச்சர்:

சிவகங்கை:

தமிழ்நாடு முதலமைச்சர்
ஒரு இலட்சம் விவசாயி மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
கேஆர்.பெரியகருப்பன் 2363 விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான சான்றிதழ்களை வழங்கினார்:
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சியில்,
தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு இலட்சம் விவசாயி மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ,
2,363 விவசாயிகளுக்கு 3778 ஏக்கர் நிலங்கள் பயனடையும் வகையில் ரூ.19.66 கோடி மதிப்பீட்டிலான மின் இணைப்பிற்கான சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் துயரைத் துடைத்திடவும் அவர்களின் செய்யும் தொழிலை தொடர்ந்து மேற்கொள்ளும் பொருட்டும், விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என, தேர்தல் காலத்தில் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் குறுகிய காலத்தில் 1 இலட்சம் மின் இணைப்புக்களை வழங்கிட உத்தரவிட்டு அதனை நிறைவேற்றி உள்ளார்கள். முன்னாள் முதலமைச்சர்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் இந்தியாவிற்கே முன்மாதிரியாக விவசாயிகளுக்கு இலவச மின்சார வழங்கி விவசாயிகளின் காவலனாக திகழ்ந்தார்கள். அவர்கள் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், விவசாயிகள் வாங்கிய பொதுக்கடன்களை ரூ.12000 கோடி கடன் தள்ளுபடி செய்தும், கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கிய ரூ.5000 கோடிக்கு மேற்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்தும், மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற ரூ.2624 கோடி என மொத்தம் ரூ.21000 கோடி கடன் தள்ளுபடி செய்த வேளாண் குடிமக்களை பாதுகாத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் இதுவரை 22 இலட்சம் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், குறுகிய காலத்தில் 1 இலட்சம் மின் இணைப்புகள் வழங்கி வரலாற்று சாதனையை தமிழ்நாடு முதலமைச்சர் நிகழ்த்தியுள்ளார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மின் இணைப்பிற்காக ரூ.2.5 இலட்சம் கட்டினால் மட்டுமே மின் இணைப்பு கிடைத்து வந்த நிலையினை மாற்றி எவ்வித பொருளாதாரச் செலவும் இல்லாமல் விவசாயிகளின் நலன் காத்திட இலவச மின்சாரத்தினை வழங்கியுள்ளார்கள்.
அதேபோல், விவசாயப் பெருங்குடி மக்கள் தங்களது உற்பத்தித்திறனை குறைத்து இலாபத்தினை அதிகரித்திடவும், வேளாண் இயந்திரங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் இயந்திரங்களை வாங்குவதற்கான நிதியுதவியினையும், சிறு விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள், தார்ப்பாய்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
வேளாண் பயிர்கள் சேதம் அடைந்தால் அதற்கு இழப்பீட்டிற்கான காப்பீடுகளும், பங்குப்பத்திரங்களும் தமிழக அரசின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், வேளாண்துறையின் மூலம் 77 பயனாளிகளுக்கு ரூ.61.00 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 89 பயனாளிகளுக்கு ரூ.40.83 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் மற்றும் கூட்டுறவுத்துiயின் சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.7.00 இலட்சம் மதிப்பிட்டிலான நலத்திட்ட உதவிகளையும் என மொத்தம் ரூ.1.07 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் 182 பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறாக, விவசாயிகளின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என்றும் விவசாயிகளின் நலனே தன் நலம் என்றும் செயல்படும்
தமிழ்நாடு முதலமைச்சர்
வேளாண் பெருங்குடி மக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என,
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக மேற்பார்வை பொறியாளர் சந்திரா, வேளாண் துறை இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன், துணை இயக்குநர்கள்
பன்னீர்செல்வம்,
கதிரேசன்,
தனபாலன்,
அழகுமலை, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுது தலைவர் சண்முகவடிவேல், பேரூராட்சித் தலைவர்கள் கோகிலாராணி, ந.அம்பலமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: