பிரதோஷ விழா:

சோழவந்தான்
சிவன் கோவில்
பிரதோஷ விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு:

சோழவந்தான்,மார்ச்:15.

சோழவந்தான் பிரளயநாதர் சிவன் கோயிலில், நடந்த பிரதோஷ விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. விழாவில், பிரளயநாதர் சுவாமி,பிரளயநாயகி அம்மன், நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர்,
ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலை வலம் வந்தனர்.
அர்ச்சகர்கள், ரவி,பரசுராம், ஐயப்பன் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை, தக்கார் இளமதி,எம்.வி.எம். குழுமத் தலைவர் மணி முத்தையா,
தொழிலதிபர் வள்ளி மயில், பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் மற்றும் பணியாளர் பூபதிஉட்பட பிரதோஷக் குழுவினர் செய்திருந்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: