திருத்தேரோட்டம்:

*மதுரை சித்திரைத் திருவிழாவின் 11ம் நாளான இன்று அம்மனும் – சுவாமியும் திருத்தேரில் பவனி*

*மதுரை* :

மதுரை சித்திரைத் திருவிழாவின் 11ம் நாளான இன்று மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஊர் கூடி தேர் இழுப்பது போல என்னும் வாக்கு பொது மக்களிடையே உள்ளது. மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக நடக்கும். ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த விழா நம் பண்பாட்டின் அடையாளம் மன்னர் நகர்வலம் வருவது போல உலகாளும் சுவாமியும், அம்மனும் தேரில் பவனி வருகின்றனர். நாயக்கர் காலத்திற்கு முன்பிருந்தே மதுரையில் தேர்பவனி நடந்தது குறித்து திருப்பணி மாலை என்னும் நூல் குறிப்பிடுகிறது. பதினாறாம் நூற்றாண்டில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார் தேர் மண்டபத்தை கட்டினார். சுவாமி, அம்மன் தேர்கள் ராணி மங்கம்மாவின் பேரன் விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் செய்யப்பட்டவை. சிவபுராணம், திருவிளையாடல், சிற்பங்கள் தேர்தலில் அழகுற செதுக்கப்பட்டுள்ளனர் தேர் பவனியின் போது சுவாமிக்கு ஆபரணம் அணிவிப்பதில்லை . பட்டுத் துண்டான பரிவட்டம் மட்டுமே கட்டுவர். தேர் பவனி முடிந்ததும் சுவாமிக்கு கிரீடம், ஆபரணம், அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும். இரவில் சப்தா வர்ண சப்பர பவனி நடக்கும். தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி, ஆகிய மூன்று அசுர்களும் ஆணவம் கொண்டு மூவுலகத்தையும் துன்புறுத்தினர். தேர் மீது ஏறி புறப்பட்ட சிவன் அசுரவதம் நிகழ்ச்சி உலகை காத்தார். இதை நினைவூட்டும் விதத்தில் சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் தேரில் பவனி வருகின்றனர் மதுரை மாசி வீதிகளில் தேரில் பவனி வந்த அம்மனையும் சொக்கரையும் லட்சக்கணக்கான மக்கள் பார்த்து அருள் பெற்றுச் சென்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: