வாடிப்பட்டியில் டாக்டர்கள் பற்றாக்குறை யால் அவதிப்படும் நோயாளிகள்:

மருத்துவர்கள் பற்றாக்குறையால் பரிதவிக்கும் நோயாளிகள்

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. அரசு மருத்துவமனை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்ப சுகாதார நிலையமாக துவங்கி செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனை பத்தாண்டுகளுக்குப் பிறகு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் ஒரு பிரசவ வார்டு மட்டுமே இருந்தது. அப்போது மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருந்தனர் . ஆரம்ப காலத்தில் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வருவது மிகவும் குறைவு . அதன்பின் கடந்த 25 ஆண்டுகளில் இந்த அரசு மருத்துவமனை அசுர வளர்ச்சி பெற்றது. இந்த மருத்துவமனையில் தற்போது வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக தனிப்பிரிவு அதில் ரத்தப் பரிசோதனை நிலையம் காச நோய் பிரிவு மருந்தாளுனர் ரூம் அவசர சிகிச்சைக்கான ரூம் இசிஜி எடுப்பதற்காக சகல வசதியுடன் கூடிய தனிப்பகுதி பெண்கள் பரிசோதனைக்காக தனிப்பகுதி, கர்ப்பிணி பெண்கள், ஸ்கேன், பரிசோதனைக்காக தனி கணினி அறை பல் மருத்துவர்கள் தனிப்பகுதி வெளி நோயாளிகள் பரிசோதிப்பதற்காக மருத்துவர்கள் என இரண்டு அறைகள் தலைமை மருத்துவருக்கு தனி அறை காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு என அத்தனை வசதிகளும் வெளிநோயாளிகள் பிரிவு உள்ளது.
இதுதவிர எக்ஸ்ரே மருந்துக் கிடங்கு தலைமை செவிலியருக்காக தனி ரூம் இந்த மூன்றும் தனி கட்டடத்தில் உள்ளது. மேலும் அலுவலக அறை பிறப்பு பதிவு அறை, கணினி அறை, ஆபரேஷன் தியேட்டர், உள் நோயாளிகளுக்கான ஆண் பெண்களுக்கு என தனித்தனி வார்டுகள் வெளிநோயாளிகள் பிரிவு சிகிச்சை முடிந்ததும் அதன் பின் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி அறை கொரோனா தடுப்பூசி செலுத்த தனி அறை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு என தனி வார்டு மற்றும் தொழுநோய் பரிசோதனைக்காக தனிகூடம் சித்தா மருத்துவமனை மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டயாலிசிஸ் கூடம், தானாகவே தயாரித்து ஆக்சிசனை நோயாளிகள் இருக்கும் வாழ்க்கையை கொண்டு செல்லும் அத்துடன் பிளான்ட் இது தவிர சந்தேகத்திற்கிடமான காய்ச்சல் வரும் நோயாளிகளை தனிமைப்படுத்த 12 படுக்கைகள் கொண்ட தனி கட்டிடம் என சகல வசதிகளையும் கொண்டது.

இந்த மருத்துவமனை ஒவ்வொரு நாளும் சுமார் 800 முதல் 1000 வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர உள்நோயாளிகளாக இரண்டு வார்டுகளிலும் சராசரியாக நாளொன்றுக்கு 40 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவ்வளவு வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் முழுமையான சிகிச்சை பெறவேண்டும் என்றால் மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லாமல் இருக்க வேண்டும்.

கடந்த மாதம் வரை பத்துக்கும் குறையாத மருத்துவர்கள் பணியில் இருந்தனர். ஆனால் தற்பொழுது இந்த மருத்துவமனையின் நிலை தலைகீழாக மாறியுள்ளது. ஒரு மருத்துவர், மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். 2பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் சம்பளம் பெறுவது இந்த மருத்துவமனையில் ஆனால் பணி புரிவது திருமங்கலம் மருத்துவமனையில் என்பதால் தற்போது இந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவரை தவிர்த்து ஐந்து மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
அதில் ஒருவர் மயக்கவியல் டாக்டர் சராசரியாக இந்த மருத்துவமனையில் வாரம் இரு நாட்கள் அறுவைசிகிச்சை நடப்பது வழக்கம். தவிர சோழவந்தான் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தால் இவர் அங்கு செல்ல வேண்டும் . அப்போது ஐந்து மருத்துவர் என்பது 4 மருத்துவர்களாக குறையும் இங்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க இரண்டு மருத்துவர்கள் இரண்டு செவிலியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் 2 அல்லது 3 நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெறுவதால் பயிற்சி பெற்ற ஒரு மருத்துவர் இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செல்ல வேண்டியுள்ளது. அதனால் வெளிநோயாளிகள் பிரிவுக்கு மூன்று மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். அதில் யாராவது ஒரு மருத்துவருக்கு வார விடுமுறை வந்தாலோ அல்லது விடுமுறை எடுத்தாலோ வெளி நோயாளிகள் பிரிவின் நிலை கவலைக்கிடம் தான். மதுரைக்கு அடுத்து நெடுஞ்சாலையில் அனைத்து வசதிகளுடன் இயங்கும் இந்த மருத்துவமனை மில் பணியாற்றும் மருத்துவர்களை செஸ் போர்டில் காய்களை நகர்த்துவது போல் இஷ்டத்திற்கு இடமாற்றம் செய்தால் இந்த மருத்துவமனை முறையாக இயங்குவது எப்படி என்பதுதான் இப்பகுதி மக்களின் மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது . இதற்கு பிறகும் இதே நிலை நீடித்தால் சகல வசதிகளையும் கொண்ட இந்த அரசு மருத்துவமனை நோய்வாய்ப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய தரப்பிற்கு பின்னோக்கித் தள்ளப்பட்டு விடும் அபாயம் உள்ளது என இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: