மருங்கப்பள்ளம் மருந்தீஸ்வரர் திருக்கோய ிலில் ஆயுஷ்யஹோம வழிபாடு நடந்தது.

நோய் தீர்க்கும் மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் ஆயுஷ்யஹோம வழிபாடு நடந்தது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் கிராமத்தில் பழமையான மருந்தீஸ்வரர் கோயில் உள்ளது.
பிரம்மா ஆணைப்படி தேவலோக மருத்துவர்கள் நசத்யா,தசரா வழிபட்ட 2ம் சரபோஜி மன்னர் வழிபட்ட அஸ்வினி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபடவேண்டிய கோயிலாகும்.தலவிருட்சமாக பாதிரி மரம் உள்ளது.ராமாயணகாலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து சென்றபோது அதன் ஒரு பகுதி கீழே விழுந்து பள்ளமாகி முற்காலத்தில் மருந்துபள்ளமாக இருந்து மருவி தற்போது மருங்கப்பள்ளமாக அழைக்கப்படும் திருத்தலமாகும்.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய முறைப்படி தீர்த்தில் நீராடி சிவனை வழிபட நற்பலன்தரும் கோயிலாகும் இத்தகைய சிறப்புமிக்க

இக்கோயிலில் மிகப்சிறப்பான ஹோமங்கள் செய்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம் அதன்படி நடந்த வழிபாட்டில் மருந்தீஸ்வரர்,மருத்துவநாயகி,மருத்துவவிநாயகர்,லட்சுமிநாராயணபெருமாள்,சுப்ரமணியர்,காலபைரவர்,அனுக்கிரஹ சனீஸ்வரபகவான் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது

அதனை தொடர்ந்து 60வயது பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்படும் சஷ்டியப்தபூர்த்தி ஆயுஷ்ஹோம வழிபாடு நடந்தது இதில் சென்னை சிவஸ்ரீ சுகுமார் சிவாச்சாரியார் ஸ்ரீமதி உஷா தம்பதியருக்கு 60ம் ஆண்டு நிறைவு சஷ்டியப்தபூர்த்தி விழா நடந்தது இதில் உறவினர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வழிபாடு தொடர்புக்கு சிவமணிகுருக்கள் 9445152424

கோயிலுக்கு செல்லும் வழி தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து 7 கி.மீ துாரமுள்ள கோயிலை பூக்கொல்லை,குருவிக்கரம்பை வழியாக மருங்கப்பள்ளம் அடையலாம்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: