தேர் சேலை, திரைக்குக் தைக்கும் மதுரை இளைஞ ர்:

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவிற்கு தேர் சேலை, அலங்கார திரைகள் தைக்கும் மதுரை வாலிபரின் கைவண்ணம்:

மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தேர்களுக்கு 10 லட்ச ரூபாய் செலவில் தயாராகும் தேர் சேலைகள்
இரண்டு வருடங்களுக்கு பின் வலம் வர தயாராகும் திருத்தேரை
வடம்பிடிக்க காத்திருக்கும் மதுரை மக்கள்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா ,
வில்லாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47) இவர் பாரம்பரியமான கோவில் தேர் களுக்கு தேவையான தேர் சேலைகள், அலங்கார திரைகள் மற்றும் டொம்பைகள்
தைக்கும் வாலிபர்.
கடந்த 25 வருடங்களாக தேர்களுக்கு தேவையான தேர் சேலை அலங்கார வடிவமைப்பாளர்.
மதுரை மீனாட்சி அம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில் ‘ தேனி வீரபாண்டி கெளமாரிஅம்மன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், சென்னை திருவல்லிக்கேணி கோவில்களுக்கு தேர் சீலைகள் அலங்கார திரைகள் தயார் செய்து வழங்கியுள்ளார்.
கடந்த 25 வருடங்களாக இத்தொழிலை செய்து வரும் செந்தில்குமாரின் குடும்பத்தினர் கடந்த இரண்டு வருட காலத்தில் கொரான பெருந்தொற்றால் திருவிழாக்கள் இல்லாததால், வேலை வாய்ப்புகள் இன்றி இருந்தனர்.
தற்பொழுது, கொரோனா பெருந்தொற்று தளர்வுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால். திருவிழா உள்பட ஆன்மீக விழாக்களும் நடைபெறுவதால் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது .
இதில் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா வரும் 15ஆம் தேதி நடைபெறும் நிலையில் பெரிய தேர் மற்றும் சிறிய தேருக்கு தேவையான தேர் சீலைகள் , டொம்பை, வாசால் மாலை, கொடி, குடை, சுருட்டி. விசிறி உள்ளிட்ட அலங்கார துணிகள் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பில் செந்தில்குமார் தயார் செய்து வருகிறார் .
மேலும் ,கோவில்களுக்கு தேவையான திரைசீலை கொடிகள் பொம்மைகள் அலங்கார வளைவுகள் ஆகியவற்றை தயார் செய்து வருகிறார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: