ஸ்ரீராஜராஜன் கல்லுாரி வளாகத்தில் நுால் அ றிமுக விழா நடந்தது

ஸ்ரீராஜராஜன் கல்லுாரி வளாகத்தில் நுால் அறிமுக விழா நடந்தது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த அமராவதிபுதூரில் ஸ்ரீ ராஜ ராஜன் கல்லூரியில் பாமர இலக்கியம் நூல் அறிமுக விழா நடந்தது.
இவ்விழாவிற்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் முனைவர். சுப்பையா தலைமைவகித்து , உரையாற்றும்போது இந்நூல் தமிழரின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாகவும் ,தமிழரின் வாழ்வியல் நடைமுறைகளை ஆவணப்படுத்தும் இலக்கியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது,இந்நூல் படைப்பாசிரியரின் முதல் நூல் ஆகும்.இந்நூல் போன்று பல தமிழ் படைப்புகளை ஆசிரியர்கள் தமிழ் உலகத்திற்கு படைக்க வேண்டும் என்றார்
சேதுபாஸ்கரா விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் முனைவர் சேதுகுமணன் முன்னிலை வகித்தார். எனஅவர் இந்நூலைப் பற்றிய சிறந்த கருத்துக்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர், நூலாசிரியர்,திரு.கஸ்தூரி ராஜா தான் எழுதிய "பாமர இலக்கியம்" என்ற நூலினை அறிமுகம் செய்து, உரையாற்றும்போது,தம் நூலை ஸ்ரீ ராஜ ராஜன் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்வது பெருமைப்பட வைப்பதாகவும் இந்நூல் 1920 இல் இருந்து 2020 வரை தமிழின் பண்பாடு மற்றும் கலாச்சார மாற்றம் குறிப்பாக மாணவர்களை இன்றைய சமுதாயத்தினை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதை ஆடை உடுத்தியும் நிர்வாணமாக இருப்பதைப்போல் நமது கலாச்சாரம் இருக்கிறது என்று வேதனையாகக்கூறுவதே இந்நூல் ஆகும். .இந்நூல் உருவாக பெருந்துணையாக இருந்தது என் மனைவி மேலும் ஒருபோதும் திரைப்படங்களில் பெண்களை குறைவாக மதிப்பிட்டு வசனமோ பாடலோ எழுதியது இல்லை என்றும் பேசினார்
முன்னதாக காரைக்குடி சிப்பி தொலைக்காட்சி நிறுவனர் அறிவுடை நம்பி வாழ்த்துரை வழங்கினார்
இவ்விழாவில் ஸ்ரீ ராஜ ராஜன்கல்லூரிகளின் முதல்வர்கள்,பேராசிரியர்கள்,பொறியியல் துறை மாணவர்கள்,கல்வியியல் துறை மாணவர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
இறுதியாக ஸ்ரீ ராஜ ராஜன் மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியர் செல்வ கணேசன் நன்றி கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: