வாடிப்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் அதிம ுக ஆர்ப்பாட்டம்:

வாடிப்பட்டி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டு கருப்பு ஆடை அணிந்து துணியை கட்டிக்கொண்டு வெளிநடப்பு:

வாடிப்பட்டி, ஏப்ரல். 11:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் கொண்டு இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இதில் ,பங்கேற்ற அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்தும் ,காலி மனைக்கு 100 சதவீத வரி உயர்வைக் கண்டித்தும், பேரூராட்சி தலைவர் ஒருமையில் பேசுவதாக கூறியும், காரசார விவாதத்தில் ஈடுபட்டனர் .
தொடர்ந்து, அவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வெளிநடப்பு செய்தனர். இதில் ,கவுன்சிலர்கள் இளங்கோவன், கீதா சரவணகுமார், சூர்யாஅசோக் குமார், பிரியதர்ஷினி, பஞ்சவர்ணம், வெங்கடேஸ்வரி கண்ணன், அசோக்குமார் உள்ளிட்ட அதிமுக கூட்டணி கவுன்சிலர்கள் இருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: