சோழவந்தான் அருகே, பட்டுப்புழு வளர்ப்பில ் சாதனை படைத்த விவசாயி:

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில்.பட்டுப்புழு வளர்ப்பில் சாதனை படைத்த விவசாயி:

சோழவந்தான், ஏப்ரல் .11:

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முருகன். பட்டுப்புழு வளர்ப்பில் கூடுதல் மகசூல் ஈட்டியதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகரிடம் பாராட்டுப் பெற்றார்.
இதுகுறித்து விவசாயி முருகன் கூறியதாவது.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டரை ஏக்கரில் மல்பெரி இலைகள் விவசாயம் செய்து, முறையாக வளர்த்து வருகிறேன்.
அரை ஏக்கர் நிலத்தில் பட்டுப்புழு வளர்ப்பிற்கான 80 க்கு 20 அடி நீள அகலத்தில் செட் அமைத்து அதில் பட்டுப்புழுக்கள்வளர்த்து வருகிறேன்.
கடந்த பத்து வருடத்திற்கும்.மேலாக இந்த பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டாலும் தற்போது கூடுதல் மகசூல் ஈட்டியதற்காக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருவதாக கூறினார்.
தொடர்ந்து, பட்டுப்புழு வளர்ப்பு குறித்து கூறும்போது
நெல், கரும்பு, வாழை என்று இப்பகுதியில் விளையும் விவசாயத்திற்கு மாற்றாக மாற்று தொழிலில் இறங்க வேண்டும் என்ற சிந்தனையில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டதாகவும் இதற்காக தேனி திண்டுக்கல் பழனி பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள இளம்புழு வளர்ப்பு மையத்திலிருந்து ஏழு நாள் வளர்ந்த பட்டுப்புழுவினை வாங்கிவந்து அதனை செட்டில் வைத்து பாதுகாத்து மல்பெரி இலைகளை உணவாக கொடுத்து அதற்குமேல் நோய்த்தடுப்பிற்க்காக சுண்ணாம்பு பவுடரை போட்டு பாதுகாத்து முறையாக வளர்த்து வருவோம்.
தொடர்ந்து, 16 நாள் வளர்ப்பு பருவம் வந்தவுடன் அவற்றை முறையாக எடுத்து தேனியில் உள்ள அரசு பட்டுப்புழு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து விடுவோம் என்று கூறினார்
மேலும், தமிழகத்தில் விலை அதிகமாக கிடைக்காத சமயத்தில் கர்நாடக மாநிலம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு இந்த பட்டு புழுவினை கொண்டு விற்பனை செய்து வருவோம் என்று தெரிவித்தார்.
தமிழக அரசு, பட்டுப்புழு விவசாயத்தில் அதிக பேர் ஈடுபடும் வகையில் 3 முதல் 5 லட்சம் வரை மானியத் தொகையை அதிக படுத்தி தரவேண்டும் மேலும் பட்டுப்புழு கொள்முதலில் நிரந்தர விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், அப்படி செய்தால் அதிகப்படியான விவசாயிகள் இந்த மாற்று தொழிலில் ஈடுபடுவர் என்று விருப்பம் தெரிவித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: