சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ம க்கள் குறைதீர்க்கும் நாள்:

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு ரூ.9.11 இலட்சம்
மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி. வழங்கினார்:

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 பயனாளிகளுக்கு ரூ.9.11 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்
திறானிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.78,850 மதிப்பிலான இணைப்பு சக்கர வாகனங்கள் 10 நபர்களுக்கு ரூ.7,88,500 மதிப்பீட்டிலும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மிளிரும் ஊன்றுகோல் வழங்கும் திட்டத்தின் மூலம் தலா ரூ.3,550 மதிப்பிலான ஊன்றுகோல் 5 நபர்களுக்கு ரூ.17,750 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளருக்கு விபத்து மரண உதவித்தொகையாக 1 நபருக்கு ரூ.1,05,000 நிவாரணத் தொகை என மொத்தம் 16 நபர்களுக்கு ரூ.9,11,250 மதிப்பீட்டிலான உதவித் தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்
திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்ற 367 கோரிக்கை மனுக்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டது.
மனுக்கள் மீது கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில்;, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மு.காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் சி.இரத்தினவேல், தொழிலாளர் நலத்துறை அலுவலர் கோடீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில எடுப்பு) சங்கரகாமேஸ்வரன், உதவி ஆணையர் (கலால்) எம்.ஆர்.கண்ணகி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: