மதுரை ஆதி சந்தன மாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை:
மதுரை:
மதுரை திடீர்நகரில் உள்ள அருள்மிகு ஆதி சந்தன மாரியம்மன் ஆலயத்தில் ,பங்குனிப் பெருவிழாயொட்டி,
கோவில் வளாகத்தில், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக, பக்தர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து திருவிளக்கு பூஜை வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் .
இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.